பதிவு செய்த நாள்
18
அக்
2016
12:10
தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் முதல்வர் ஜெ., பூரண நலம் பெற வேண்டி விளக்கு பூஜை நடந்து. தியாகதுருகம் அடுத்த வடபூண்டி பச்சைம்மன் கோவிலில் நடந்த பூஜைக்கு அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அய்யப்பா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர் மோகன், எம்.பி., காமராஜ், எம்.எல்.ஏ., பிரபு முன்னிலை வகித்தனர். கோவில் வளாகத்தில் 568 விளக்குகளில் தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு நடத்தினர். முதல்வர் ஜெ., பூரண நலம் வேண்டி அர்ச்சனைகள் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ., கோமுகி மணியன், ஞானமூர்த்தி, அழகுவேலுபாபு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, இளைஞரணி இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் ஷியாம்சுந்தர், துணை செயலாளர் ராஜவேல், பாண்டுரங்கன், மாவட்ட மீனவரணி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் ராமன், மாவட்ட பிரதிநிதி குமார், இணை செயலாளர் சாமிதுரை, பொருளார் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்கள் மூர்த்தி, ராஜேந்திரன், இலக்கிய அணி செயலாளர் குமரவேல், பேரவை செயலாளர் செல்வராஜ், பாசறை தலைவர் பரியாஸ், ஊராட்சி தலைவர்கள் நீலாவதி கதிர்வேல், அலமேலு, அஞ்சலை பழனிசாமி, ராஜி, மணிவேல், வரதராஜ், மணிவண்ணன், வள்ளியம்மை நாராயணன், அமிர்தம்ராஜவன்னியன் தங்கராஜ், அன்பு உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.