செஞ்சி : செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு மகா ஜோதி தரிசனமும், புஷ்பாஞ்சலியும் நடந்தது. செஞ்சி தாலுகா செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு, நள்ளிரவு 12:00 மணிக்கு மகா ஜோதி தரிசனம் மற்றும் புஷ்பாஞ்சலி நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு சித்தர் வழிபாடும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. தொடர்ந்து 8:00 மணிக்கு சிறப்பு யாகம், லலிதா சகஸ்ர நாமம், அஷ்டோத்ர நாமாவலி யும், இரவு 10:00 மணிக்கு அம்மனுக்கு கலச பூஜை யும், இரவு 11:00 மணிக்கு மகா புஷ்பாஞ்சலியும், சிறப்பு வழிபாடும் நடந்தது. இரவு 12:00 மணிக்கு மகா ஜோதி தரிசனம் நடந்தது. தொடர்ந்து 16 வகை தீபாராதனை செய்தனர். இதில் அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் விழா குழுவினர் உட்பட திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவம் செய்தார்.