பதிவு செய்த நாள்
18
அக்
2016
12:10
கள்ளக்குறிச்சி: முதல்வர் ஜெ., உடல் நலம் பெற வேண்டி, கள்ளக்குறிச்சி ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துார் சித்தி விநாயகர் கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, எம்.ஜி.ஆர்., மன்ற பொருளாளர் குபேந்திரன், அரசு வக்கீல் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் தினகரன், ஒன்றிய மாணவரணி தலைவர் சக்திவேல், கிளை செயலாளர் ராமு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கல்பனா ஹரிகரன், ஒன்றிய பொருளாளர் ராஜமாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம், இலக்கிய அணி இணை செயலாளர் மணி, ஜெ., பேரவை நிர்வாகிகள் கோவிந்தன், கிருஷ்ணன், கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். பெண்கள் பலரும் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.