பதிவு செய்த நாள்
22
நவ
2016
12:11
கோபி: கோபி பச்சமலை கோவிலில், பைரவாஷ்டமி விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி, மதியம், 3:00 மணிக்கு பைரவருக்கு மகா ஹோமம் நடந்தது. இதை தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. அதையடுத்து மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது.பூஜையில், கோபி பாரியூர் ரோடு, பச்சமலை ரோடு, மொடச்சூர், சீத்தாலட்சுமி புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு புளி சாதம், பீட்ரூட் சாதம், மிளகு சாதம், வடையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.