ஊத்துக்கோட்டை : கார்த்திகை மாத சோமவார பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். ஊத்துக்கோட்டையில் உள்ளது ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை மாத திங்கட்கிழமை, சோமவார பூஜை நடைபெறும். நேற்று, கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமை ஆனதால், சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பெண்கள் விளக்கேற்றி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.