ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என வேதங்கள் நான்காகும். ரிக் என்றால் துதித்தல் என்று பொருள். முதல் வேதமான இது இந்திரன், வருணன் உள்ளிட்ட தேவர்களை போற்றி வணங்குகிறது.யஜ் என்றால் வழிபடுதல் யாகம் செய்து வழிபடும் முறைகள் இதில் இடம் பெற்றுள்ளன. சாம் என்றால் சந்தோஷப்படுத்துதல். பாடல்களின் தொகுப்பான இது படிப்போருக்கு மகிழ்ச்சி தரக்கூடியது. பகவத்கீதையில் கிருஷ்ணர், வேதங்களில் நான் சாம வேதமாக இருக்கிறேன் என குறிப்பிடுகிறார். சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களால் ஆன சங்கீதத்திற்கு சாமவேதமே அடிப்படை. நான்காவது வேதம் அதர்வணம். அதர்வண மகரிஷியால் உலகிற்கு அளிக்கப்பட்ட இது ஆபத்துக்கள், எதிரி தொல்லையில் இருந்து விடுபட உதவும் மந்திரங்களைக் கொண்டது.