பதிவு செய்த நாள்
30
நவ
2016
10:11
திருவண்ணாமலை திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவத்துடன் துவங்குகிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா, கொடியேற்றம் டிச., 3ல் நடக்கிறது. 9ல் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா, மஹா ரத தேரோட்டம் நடக்கிறது. டிச., 12ல், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை காண பல்வேறு பகுதியிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவர். விழா சிறப்பாக நடக்க வேண்டி, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு விழா எடுப்பது வழக்கம். அதன்படி, இன்று துர்க்கையம்மனுக்கு உற்சவ விழா நடக்கிறது. இதை முன்னிட்டு துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. இதையடுத்து, அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி, துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.