சென்னிமலை: சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி மாரியம்மன் கோவிலில் கடந்த நவ., 16 இரவு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது. அடுத்து, 23 இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் தினமும் காலையில் பெண்கள் கம்பத்துக்கு நீர் ஊற்றி வழிபட்டனர். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடந்தது. பசுவபட்டி, பூச்சக்காட்டுவலசு, சென்னிமலைபாளையம் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். அதேபோல், புதுவலசு மாரியம்மன் கே.ஜி.வலசு, புதுவலசு மாரியம்மன் கோவிலில் நேற்று பொங்கல் விழா நடந்தது. இதில் புதுவலசு, எடக்காடு, சேர்வைகாரன்வலசு, குப்பிச்சிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகள் பலியிட்டும் அம்மனை வழிபட்டனர்.