Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ... ஒரு கோடி தன லட்சுமி யாகம் நிறைவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3,500 ஆண்டு வன்னி மரத்தை மீட்க முயற்சி விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2016
12:12

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலிலுள்ள 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தலவிருட்சமான வன்னி மரத்தை மீட்க மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சட்டசபை கூட்டத்தில் 110 விதியின் கீழ் பழமையான கோவில்களில் மூலவருடன் தொடர்புடைய மிக அபூர்வ தலவிருட்சங்கள் பட்டுப் போவதைத் தடுக்க மரபணு அல்லது பிற தாவர இனப்பெருக்க முறையில் மீட்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., அறிவித்தார். அதன்படி, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை மாவட்டங்கள் அடங்கிய இணை ஆணையர் எல்லைக்குட்பட்ட விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர், திருவக்கரை வக்ரகாளியம்மன், திருவந்திபுரம் தேவநாதசுவாமி, திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர், வேலுடையான்பட்டு முருகன் கோவில், செங்கம் வேணுகோபாலசாமி, திருவரங்கம் ஆதிதிருவரங்கம் உள்ளிட்ட 10 கோவில்களின் தலவிருட்சங்களை மீட்டெடுக்க இணை ஆணையர் அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வன்னி மரம் தலவிருட்சமாக உள்ளது. 1,500 ஆண்டுக்கு முன்பே விபசித்து முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிலின் கட்டுமானப் பணிக்காக, பணியாளர்களுக்கு வன்னி மரத்தின் இலைகள் ஊதியமாக வழங்கப்பட்டது. அவற்றை பெற்றுச் செல்பவர்களின் உழைப்பிற்கேற்ப பணமாக மாறியதாக கோவில் தலவரலாறு கூறுகிறது. தற்போது இந்த வன்னி மரத்தின் அடிப்பாகம் நலிவடைந்து பட்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் இம்மரத்திற்கு விதையோ, கன்றோ இல்லாத நிலை உள்ளது. அதனால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த தலவிருட்சத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக, கடந்த வாரம் விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மரத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். அதையடுத்து, முதல் முயற்சியாக வன்னிமரத்தின் கிளை ஒன்றை வெட்டி எடுத்து, அதை விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் பதியம் போட்டு, வேர் உற்பத்தி செய்யும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சி
பலனளிக்கவில்லை என்றால் மரத்தின் திசுக்களை எடுத்து அதன்மூலம் மரத்தின் புதிய கன்றை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் கருணாகரன் தெரிவித்தார். இது குறித்து விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் அனீஷாராணி கூறுகையில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தலவிருட்சமான வன்னிமரம் பட்டுபோகும் நிலையில் உள்ளது.

இதனால், அதன் இனத்தை உற்பத்தி செய்து, கோவிலில் நட்டு வளர்க்க புதிய கன்றை உருவாக்கித்தர, செயல் அலுவலர் கருணாகரன் கோரிக்கை விடுத்தார். அதையடுத்து, அந்த மரத்தின் கிளையின் தண்டு ஒன்றை வெட்டியெடுத்து வந்து, மண்டல ஆராய்ச்சி நிலையப் பண்ணையில் பதியம் போடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அந்த தண்டு வேர்விடும் பட்சத்தில் அதிலிருந்து புதிய கன்றுகள் உற்பத்தி செய்து, கோவில் வளாகத்தில் நட்டு வளர்க்க
வழங்கப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே வளையனேந்தல் கிராமத்தில் உள்ள கூம்பாச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar