துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள கழுகாச்சல மூர்த்தி கோயிலில் மலர்காவி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் மலர் காவடி எடுத்தனர். விருதுநகர் மாவட்ட முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில் கழுகுமலை கழுகாச்சலமூர்த்தி கோயிலில் மலர்காவடி திருவிழா நடந்தது. அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 7 மணிக்கு சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். விழாவில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாசல அடிகளார், குற்றாலம் ஸ்ரீவிவேகானந்த ஆசிரம ஸ்தாபகர் அகிலானந்த, ஆகியோர் அருளுரை வழங்கினர். அதன் பின் கோயில் முன்பிருந்து ஏராளமான பக்தர்கள்மலர்காவடி எடுத்து கிரிவலப்பாதையை சுற்றி வந்தனர். வசந்த மண்டபத்தில் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன், சிற்பி கருப்பசாமி, முருக பக்த பேரவை பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.