பதிவு செய்த நாள்
12
டிச
2016
12:12
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் கட்டட திறப்பு விழாவில், ராமேஸ்வரம் பாதிரியார் உட்பட, 20 பேர் பங்கேற்க உள்ளனர். அந்தோணியார் சர்ச் அருகே, புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, டிச., 7ல் நடக்க இருந்தது. ஜெயலலிதா மரணம் அடைந்ததால், அவ்விழாவை இலங்கை அரசு ரத்து செய்தது. இந்நிலையில், சர்ச் புதிய கட்டடத்தை, யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா, டிச., 23ல் நடக்கிறது. ராமேஸ்வரத்தில் இருந்து பாதிரியார், மீனவர்கள் உட்பட, 20 பேர் பங்கேற்க, மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.