உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் சோமவார சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2016 01:12
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக சிவலிங்க வடிவில் சங்குகள் அடுக்கப்பட்டு அதில் புனித நீர் நிரப்பப்பட்டது. தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை, தேவாரம், திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டன. இதையடுத்து பூரண கும்ப மரியாதையுடன் புனித நீர் கோயில் பிரகாரத்தில் வலம்வந்த பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சங்கில் உள்ள புனிதநீரைக்கொண்டு மூலவருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை நடந்தது. ராஜ அலங்காரத்தில் மங்களநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். * சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிற வள்ளியம்மன் கோயிலில் காலை 10:00 மணிக்கு சங்காபிஷேகம் நடந்தது.