பதிவு செய்த நாள்
13
டிச
2016 
01:12
 
 பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கார்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி கடைவீதி பால கணேசர் கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி, சிறப்பு அபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகளும்; சொக்கப்பானை கொளுத்துதல், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி, மஞ்சள் அம்மன், ஐயப்பன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. தொடர்ந்து, கார்த்திகை தீபம் கோவிலில் வலமாக எடுத்து வரப்பட்டு, ஏற்றப்பட்டது. இதுபோன்று, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் விநாயகர் கோவில், பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், மாரியம்மன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில்களில், கார்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும், தீபங்கள் ஏற்றப்பட்டன.