போடி : போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் சித்தர்களால் கட்டப்பட்ட கயிலாய கீழச்சொக்கநாதர் கோயில் உள்ளது. இங்கு நேற்று கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாராதனைகள் நடந்தது. காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது. சிவனுக்கு சிறப்பு அலங்காரத்தினை போடி ஜமீன்பரம்பரையை சேர்ந்த பாண்டி சுந்தரபாண்டியன் செய்திருந்தார்.
* மேலச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. * போடி பரமசிவன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.