சிக்கல் : சிக்கல் அருகே மேலக்கிடாரத்தில் பழமை வாய்ந்த திருவனந்தீஸ்வரமுடையார் சமேத காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இங்கு கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை கோபுர விமானத்தின் மேற்பகுதியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.