பதிவு செய்த நாள்
17
டிச
2016
12:12
பரமக்குடி : மார்கழி உற்சவத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அனைத்து கோயில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாடி சுவாமி தரிசனம் செய்தனர். சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சிக்கு பின் பக்தர்கள் ஆண்டாள் அருளிய திருப்பாவை, பாசுரங்கள் பாடினர். தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதுபோன்றுஈஸ்வரன் கோயிலில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், அனுமார் கோதண்டராமசாமி கோயில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில், யோகமுனீஸ்வரர் கோயில், எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயில், எமனேஸ்வரமுடையவர் கோயில், நயினார்கோவில் நாகநாதசுவாமி உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாடி சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் வீடுகள் முன்பு விதவிதமான கோலங்கள் இட்டு மகிழ்ந்தனர். வீதிகள்தோறும் பஜனை குழுவினர் பக்தி பாடல்கள் பாடிச்சென்றனர். அனைத்து கோயில்களிலும் இம்மாதம் முழுவதும் ஆருத்ரா தரிசனம், காளபைரவ அஷ்டமி, வைகுண்ட ஏகாதசி, அனுமன்ஜெயந்தி, கூடாரவல்லி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள், விழாக்கள் நடக்கவுள்ளது.