பதிவு செய்த நாள்
17
டிச
2016
12:12
அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகராட்சி சார்பில், கோட்டை ஈஸ்வரன் கோவிலில், நேற்று தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. நகரில் உள்ள வழிபாட்டு தலங்களில், வரும், 31ம் தேதி வரை, சுகாதார பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, கோட்டை ஈஸ்வரன் கோவிலில், நேற்று தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. துப்புரவு பணியாளர்கள், 50க்கும் மேற்பட்டோர், கோவில் வளாகத்தில் கிடந்த குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்தனர். கோவில் முன் உள்ள தீர்த்த கிணற்றில் இருந்த குப்பை, கழிவுகளை அகற்றப்பட்டன. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் செல்வநாயகம், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.