காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. 21லட்சத்து, 61ஆயிரம் ரூபாய், 502 கிராம் தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பக்தர்கள் செலுத்தும் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கோவிலில் மூலவர் சன்னதி மற்றும் தாயார் சன்னதி உட்பட, 13 இடங்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை உண்டியல்கள் திறந்து, எண்ணப்பட்டன. இதில், 21லட்சத்து, 61ஆயிரத்து, 579 ரூபாய் மற்றும் 502 கிராம் தங்கம், 145 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.