கிணத்துக்கடவு விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2016 02:12
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அடுத்துள்ள சொலவம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகர் விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. இக்கோவில் துவங்கி முதலாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, விநாயகருக்கு 108 சங்குகள் வைத்து பூஜை செய்து, சங்கு தீர்த்தம் ஊற்றி சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. பின், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.