பதிவு செய்த நாள்
19
டிச
2016
02:12
புதுச்சேரி: செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டம், ராமானுஜர் பிரபக்தி இயக்கம் மற்றும் மார்கழி மகோற்சவ கமிட்டி சார்பில், 5ம் ஆண்டு மார்கழி மகோற்சவம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதனையொட்டி, நேற்று மதியம் 2.00 மணிக்கு, எல்லைபிள்ளைச்சாவடி சாராதாம்பாள் கோவிலில் இருந்து ராமனுஜர் சஞ்சார ரதயாத்திரை நடந்தது. இதனை தொடர்ந்து, செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், திருக்கோவிலுார் ஜீயர் சுவாமிகளின் முன்னிலையில் ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில், முதல்வர் நாராயணசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., , முன்னாள் எம்.எல்.ஏ., ஜான்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.