காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் திருப்பாவை சொற்பொழிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2016 02:12
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில், மார்கழி மாதத்தை முன்னிட்டு, திருப்பாவை சொற்பொழிவு நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலில், மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பாவை தொடர் சொற்பொழிவு நேற்று முன்தினம் முதல், வரும் ஜனவரி மாதம் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. தினம் மாலை வேளைகளில் நித்யகல்யாண பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சொற்பொழிவுகளும் நடக்கிறது. இதில் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் அரங்கநாதச்சாரியார் சுவாமிகள் தலைமையில் திருப்பாவை சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் தனி அதிகாரி ஆசைத்தம்பி உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.