அஸ்தம்பட்டி: இம்மானுவேல் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் மெழுகுவர்த்தி பிரார்த்தனையில், கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு, ஒரு வாரம் உள்ள நிலையில், தேவாலயங்களில், மெழுகுவர்த்தி பிரார்த்தனை நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று மாலை, அஸ்தம்பட்டி இம்மானுவேல் தேவாலயத்தில், போதகர் அகிலன் தலைமையில், மெழுகுவர்த்தி பிரார்த்தனை நடந்தது. இதில், தேவாலய செயலாளர் சேகர் ஜெபசிங், பொருளாளர் ஜான்ராஜன் உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபட்டனர்.