திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட பாடல்கள் தேவாரம். இவர்கள் பாடிய தலங்களைத் தேவாரத்தலங்கள் என்று குறிப்பிடுவர். இதில் மூவராலும் முதன்முதலில் பாடப்பட்ட தலங்கள் சிறப்பானவை. திருஞானசம்பந்தர் தோடுடைய செவியன் என்ற பாடலை அம்மையப்பராக வந்து பாலூட்டிய போது சீர்காழி தோணியப்பர் கோயிலில் பாடினார். நாவுக்கரசர் வயிற்றுவலியால் துடித்தபோது, கூற்றாயினவாறு விலக்ககிலீர் என்னும் பாடலை காஞ்சிபுரம் வீரட்டானத்துறை சிவன் மீது பாடினார். சுந்தரர் இறைவனே வயோதிகராக வந்து ஆட்கொண்டபோது, பித்தா பிறைசூடி என்ற தொடங்கும் பாடலை திருவெண்ணெய் நல்லூரில் பாடினார்.