ராமேஸ்வரத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்; லாட்ஜ்களில் வாடகை விர்ர்...
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2016 12:12
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. லாட்ஜ்களில் அறை வாடகை இரு மடங்கு அதிகரிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பலர் குடும்பத்துடன் முக்கிய கோயில்கள், சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் டிச., 25 முதலே பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பிவழிகிறது. இதற்கிடையே வட மாநில பக்தர்கள் 5 ஆயிரம் பேர் ராமேஸ்வரத்தில் தங்கி மகாபாரதம், ராமாயணம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்துவதால் கோயில் ரதவீதிகள், அக்னி தீர்த்தகடல், பஸ் ஸ்டாண்ட், கார் பார்க்கிங் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லாட்ஜ்களில் வழக்கத்தை விட அறை வாடகை இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ள னர். அதிக கட்டணம் கொடுக்க விரும்பாத பக்தர்கள் இரவு முழுவதும் குடும்பத்துடன் ரதவீதிகளில் தங்குகின்ற பரிதாப நிலையும் தொடர்கிறது.ராமேஸ்வரத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் லாட்ஜ் உரிமையாளர்கள் மீது தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.