மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2017 02:01
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு, மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புத்தாண்டை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.