பழநி;கார்த்திகைதிருநாளை முன்னிட்டு பழநிமலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள் ஐந்து மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.பழநி ஞானதண்டயுதபாணிசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ஞாயிறுவிடுமுறை, கார்த்திகையை முன்னிட்டு மலைக்கோயில் நடை அதிகாலை நான்கு மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயில் சென்றனர். பொதுதரிசனம் வழியில் ஐந்து மணிநேரம் காத்திருந்து மூலவர் ஞான தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். மாலை 108 திருவிளக்குபூஜை, இரவு 7 மணி தங்கரதபுறப்பாட்டை காண பக்தர்கள் திரண்டனர்.பாதவிநாயகர் கோயில், சன்னதிவீதி, வடக்குகிரிவீதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் காவடி எடுத்து வந்த பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். போதிய போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.