Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி கோவில்களில் ... பழநியில் தரிசனத்திற்கு 5 மணிநேரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் நாளை ஆருத்ரா தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் நாளை ஆருத்ரா தரிசனம்

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
12:01

கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி சுவாமி கோயிலில் நாளை ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி தாயார் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற சிவாலயம். இங்கு பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடராஜரின் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் படி களையப்பட்ட அபூர்வ தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

கடந்த ஜன.,2ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நாளை (ஜன., 10) காலை 9 மணிக்கு கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு படி களையும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஜன.,11ல் ஆருத்ரா தரிசனத்தில் காலை 11:00 மணிக்கு மரகத நடராஜருக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்படும். பின்னர் இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்று, கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தரும் நிகழ்ச்சியும், அதிகாலை 4:00 மணிக்கு அருணோதய நேரத்தில் சுவாமியின் திருமேனியில் சந்தனக்காப்பிடுதலும் நடக்கும்.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar