Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஏழுநிலை ... திருமூர்த்திமலையில் தை அமாவாசை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூஜை முறைகளில் உள்ள வேறுபாடு பூசாரிகளுக்கு திறன் மேம்பாட்டுப்பயிற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2017
01:01

கோவை: இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில், பணி புரியும் கிராமக்கோவில் பூசாரிகளுக்கு, கோவையில் துவங்கிய நான்கு நாட்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நேற்று நிறைவடைந்தது. கோவை சுக்கிரவார் பேட்டையிலுள்ள, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், கிராமக்கோவில் பூசாரிகளுக்கான, திறன் மேம்பாட்டுப் பயிற்சியை, கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் இளம்பரிதி, ஜன., 24ம் தேதி, துவக்கி வைத்தார்; உதவி கமிஷனர்கள் ஆனந்த், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் பட்டீசுவரர் கோவில் சர்வசாதகர் சிவாச்சல சுந்தரகுருக்கள், சிவாச்சாரியர்களுக்கான, சிவவழிபாடு, அதன் தொன்மை, சிவனின் தன்மை, ஆகம விதிகள், அதன் நடைமுறை, வழக்கமாக மேற்கொள்ளும் பூஜை முறைகள், அவற்றை மேற்கொள்ளும் விதம். அர்த்தயாமம், ராக்காலம். உச்சிகாலம், உதயம், அஸ்தமனம் ஆகிய பூஜை முறைகளுக்குள் உள்ள வேறுபாடுகளையும் அவற்றை நடத்துவது குறித்தும், பிரதோஷம், சிவராத்திரி, கும்பாபிஷேகம், வேள்வி, யாகம், கும்பஸ்தாபனம் ஆகியவை குறித்து கற்றுக்கொடுத்து விளக்கமளித்தார்.

கிராமக்கோவில் பூசாரிகள் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கமளித்தார். சைவ சித்தாந்தம் குறித்த பயிற்சியும், அம்மன் கோவில் பூசாரிகளுக்கான பூஜை நடைமுறைகள் குறித்தும், பெருமாள் கோவில் பூசாரிகளுக்கான பூஜை நடைமுறை குறித்த பயிற்சியும் நடந்தது. இறுதி நாளான நேற்று முருகன் கோவில் பூசாரிகளுக்கு பல விதமான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற கோவை மண்டலத்திலுள்ள, நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமக்கோவில் பூசாரிகளுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர்கள் விமலா, முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் என்று புதிய தேர் ரத பிரதிஷ்டையும் வெள்ளோட்ட ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அன்னையின் 148வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் அறையை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar