கடலாடி;கடலாடி அருகே மேலக்கடலாடி செல்லியரம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதையொட்டி மூலவர் அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம, அலங்காரம், தீபாராதனை நடந்தது. முன்னதாக கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.