பதிவு செய்த நாள்
01
பிப்
2017
12:02
திருப்பூர் : ஊத்துக்குளி, ஸ்ரீ கதித்தமலை வெற்றிவேலாயுதசாமி கோவிலில் கணபதி ஹோமம், கிராமசாந்தியுடன் தைப்பூச விழா நேற்று துவங்கியது. இன்று காலை, 10:35க்கு, கதித்தமலையில் கொடியேற்றமும், சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது. வரும், 8ம் தேதி வரை, காலை, 8:00 மற்றும் இரவு 7:00க்கு, சுவாமி திருவீதி உலா நடக்கிறது. வரும், 9ம் தேதி, திருக்கல்யாணம்; 10ம் தேதி, அடிவாரத்தில் உள்ள ரதத்தில் எழுந்தருளல்; கீழ் திருத்தேரோட்டம் நடக்கிறது.11ம் தேதி, பரிவேட்டை, தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. 13ம் தேதி, மலைத்தேரில் சுவாமி எழுந்தருளல் மற்றும் மலைத்தேரோட்டம் நடக்கிறது. 14ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழாவுடன், தைப்பூசத் தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.