பிப். 6ல் அய்யம்பொழில் ஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நாளை யாகசாலை பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2017 12:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயில்களில் ஒன்றான ஆமூர் மீனாட்சி அம்மன் உடனுறை அய்யம்பொழில் ஈஸ்வரர் கோயில் பழமையும், புராதன சிறப்பும் பெற்றது. இக்கோயில் 12ம் நுாற்றாண்டில் குலசேகரபாண்டியன், மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பெற்றது. காடு வெட்டி எனவும் அழைக்கப்பட்டது. இக்கோயில் மயில் நின்றாடும் சிறப்பு பெற்றது. சோழ குறுநில மன்னர்களால் கருவறை திருநிலை அமைக்கப்பட்டது. மதுரையில் இருந்து திருவாதவூர் செல்லும் வழியில் கோயில் உள்ளது. நல்லணி ஆமூர் என்று கல்வெட்டுகளால் அறியப்படும் இக்கோயில் மிகவும் சிதிலமடைந்திருந்தது. மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு பிப்.,6ல் காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை(பிப்.,2) யாகசாலை பூஜை துவங்குகிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.