பதிவு செய்த நாள்
02
பிப்
2017
02:02
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில், 11ம் ஆண்டு, தைப்பூச திருவிழா முருகப் பெருமான் கோவிலில் நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டையில், ஆனந்தவல்லி சமேத திருநீல கண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் சன்னிதி உள்ளது. இங்கு, வரும், 9ல், 11ம் ஆண்டு தைப்பூச திருவிழா கொண்டாடப்பட உள்ளது. 9ம் தேதி காலை, 6:00 மணிக்கு, மகா கணபதிக்கு அபிஷேக, ஆராதனையும், 8:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு, 108 பால்குட அபிஷேகமும் நடைபெறஉள்ளது. பகல், 12:00 மணிக்கு கோவிலில் இருந்து, உற்சவர் முருகப்பெருமான் மங்கள வாத்தியத்துடன் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.