பதிவு செய்த நாள்
02
பிப்
2017
02:02
அரூர்: அரூர் தேவாதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, 219 ஆடுகளை பலியிட்டு, பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். அரூரில், ஒரு சமுதாயத்தினர் சார்பில், தேவாதியம்மன் கோவில் திருவிழா, ஆண்டுதோறும் தை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களின் வியாபாரம் மேம்பாடு அடையவும், குடும்ப நலம், ஊர் நலம், அமைதி, மழை வளம் உள்ளிட்டவைகளை வேண்டி நடத்தப்படும் இந்த தேவாதியம்மன் திருவிழாவில், ஆண்கள் மட்டுமே பங்கேற்பர். அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபம் பின்புறம் தேவாதியம்மன் கோவில் உள்ளது. திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு, 24 ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டன. தொடர்ந்து, நேற்று காலை நடந்த விழாவில், 195 ஆடுகள் அம்மனுக்கு பலியிடப்பட்டன. பின், அந்த சமூகத்தை சேர்ந்த, 2,045 குடும்பத்தினருக்கு, கறி பங்கிட்டு வழங்கப்பட்டது.