பதிவு செய்த நாள்
02
பிப்
2017
02:02
ஈரோடு: சின்னசேமூர், மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாநகரின் முக்கிய கோவில்களில் ஒன்றான, சின்னசேமூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த, 24ல் காப்புகட்டுதல், பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது, பின்னர், பூவோடு வைத்தல் நிகழ்ச்சி, தீர்த்த ஊர்வலம் நடந்தது. பொங்கல், மாவிளக்கு மற்றும் அலகு ஊர்வலம் நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், பறவை காவடி அலகு, கத்தி அலகு, திருவாச்சி அலகு, வேல் அலகு என, பங்வேறு வகையான அலகு குத்தி வந்தும், அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தும், நேர்த்திக்கடன் செலுத்தினர். கனிராவுத்தர் குளத்தில் புறப்பட்ட ஊர்வலத்தில், சின்னசேமூர் வரை ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஊர்வலத்தில் இளைஞர்கள் உற்சாகமாக ஆடி, பாடி சென்றனர். பொங்கலை முன்னிட்டு, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.