பதிவு செய்த நாள்
02
பிப்
2017
02:02
மோகனூர்: மோகனூர், பாலதண்டாயுதபாணி கோவில் தைப்பூச திருவிழா துவங்கியது. மோகனூரில் பிரசித்தி பெற்ற காந்த மலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆண்டு தோறும், தைப்பூச தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 8 வரை, நாள்தோறும் அபிஷேகம், இரவு, 7:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா வருகிறார். பிப்., 9 மாலை, 4:00 மணிக்கு, திருத்தேர் இழுக்கப்படுகிறது. பிப்., 10 காலை, 10:00 மணிக்கு அபிஷேகம், இரவு, சத்தாபரணம்; 11ல், காலை, 10:00 மணிக்கு விடையாற்றி, மாலை, 4:00 மணிக்கு மஞ்சள் நீர் பல்லாக்கு நிகழ்ச்சி நடக்கிறது. பிப்., 12 மதியம், 1:00 மணிக்கு அன்னதானம், இரவு, 7:00 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா; பிப்., 13ல், காலை, 8:00 மணிக்கு காவிரி ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள், காவடி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வருகின்றனர். அன்று இரவு, 7:00 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அரும்பாலிக்கின்றார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.