பதிவு செய்த நாள்
04
பிப்
2017
01:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபி ஷேக விழாவில், பிப்.,3 சிவாச்சாரியார்கள் மாட வீதி வலம் வந்து, விழா சிறப்பாக நடக்க வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 6 அன்று மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த, 26 துர்கையம்மன் உற்சவத்துடன் விழா தொடங்கியது. கடந்த, 2ல் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று காலை, 8:00 மணிக்கு நகர காவல் தெய்வமான துர்கையம்மன் கோவிலில் விசேஷ சந்தி நடந்தது. அதை தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவில் யாக சாலை பூஜையில், ஆறாம் கால யாக பூஜை நடந்தது. பின்னர், யாக சாலையில் பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள், மேளதாளம் முழங்க மாட வீதி வலம் வந்து, விழாவை சிறப்பிக்க வேண்டி பிரார்த்தனை செய்தனர். மாலை, 4:35
மணிக்கு யாக சாலையில் விசேஷ சந்தியும், ஏழாம் கால யாக பூஜையும் நடந்தது. இரவு, 8:05 மணிக்கு மூலகருவறை அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் சுவாமிகளுக்கு அஷ்டபந்தம் சாற்றுதல் நடந்தது. இரவு, 9:00 மணிக்கு பூர்ணாஹூதி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.