பதிவு செய்த நாள்
04
பிப்
2017
01:02
பொள்ளாச்சி: நெகமம், ஸ்ரீமாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிேஷக விழா பிப்.,3 விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. நெகமம், நாகர் மைதானம் அருகே. பழமையான ஸ்ரீமாகாளியம்மன் கோவில் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட இக்கோவிலின் கும்பாபிஷேக விழா வரும், 6ம் தேதி காலை,6.30 மணிக்கு நடக்கிறது. முன்னதாக பிப்.,3 மங்கள இசை, மஞ்சள் விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் துவங்கியது. இன்று, அதிகாலையில் கணபதி ேஹாமம், கோபூஜை, யாகசாலை பிரவேசம், முதல்கால பூஜைகள் நடக்கிறது. வரும் திங்களன்று அதிகாலை, 4.00 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, தொடர்ந்து தீபாராதனை தொடர, காலை, 6.30 7.30 மணிக்குள் கலசம் புறப்பாடு மற்றும் விநாயகர், முருகன், ஸ்ரீமாகாளியம்மனுக்கு மகாகும்பாபிஷேகமும் நடக்கிறது. கும்பாபிேஷகத்தை சிவஸ்ரீசுமன்கார்த்திக் சிவாச்சாரியார் நடத்தி வைக்கிறார். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா குழுவினரும், செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) ஜெயசெல்வமும் செய்து வருகின்றனர்.