மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தாசம்பாளையம் ஊராட்சி வேடர்காலனியில் குறிஞ்சிமலை குமரன் கோவில் உள்ளது. இங்கு வரும், 9ம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, காலை, 10:30 முதல் மதியம், 1:30 மணி வரை சிறப்பு வேள்வியும், மஞ்சனமும், அலங்காரமும் நடைபெறுகின்றன. விழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், வேடர்காலனி, இலங்கை முகாம் மக்கள் செய்து வருகின்றனர்.