அன்னுார்: கணுவக்கரை மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 9ம் தேதி நடக்கிறது. கணுவக்கரையில், மாகாளி அம்மன், சக்தி கணபதி, பால முருகன், கருப்பண்ணசாமி, சப்த கன்னியர் கோவில் உள்ளது. இங்குள்ள பாலமுருகன் சன்னதி பிரசித்தி பெற்றது. இங்கு கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா வரும் 7ம் தேதி விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. கோவிலுக்கு முளைப்பாரி எடுத்து வருதல், யாகசாலை பூஜை, தீபாராதனை நடக்கிறது. 8ம் தேதி மண்டபார்ச்சனை, ஸ்துபி வைத்தல், எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. 9ம் தேதி காலை 9:15 முதல் 10:45 மணிக்குள் அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.