வெம்பக்கோட்டை: தாயில்பட்டி கம்மவார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள்கோயில் கும்பாபிஷேகம் இன்றுநடைபெறுகிறது. இதை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. கோயில் வளாகத்தில் ஸ்ரீஆண்டாள்ரெங்கமன்னார், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர், மனவாளமாமுனிகள் மற்றும் நம்மாழ்வார் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 7:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்துார் மனவாளமாமுனி ஜீயர் திருக்கோஷ்டியூர் மாதவன்சுவாமி தலைமையில் வகிக்கிறார்கள்.