வெண்ணெய்மலை : கரூர் அருகே உள்ள, வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கந்தபெருமானை வழிபட்டனர். இன்று காலை, 5:45 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளுதல், மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை சுற்றி, நான்கு மாட வளாகத்தில் திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர். நாளை, 9:15 மணிக்கு மேல், தேனுதீர்த்தத்தில் தீர்த்தவாரியுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.