உசிலம்பட்டி: உசிலம்பட்டி குருசாமிகோயில் தெருவில் சாந்தமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக வைபவம் நடந்தது. நேற்று காலை 5.00 மணிக்கு யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. காலை 7.45 மணிக்கு கோபுர கலசங்களுக்கும், அம்மனுக்கும் புனிதநீரால் அபிஷேகம், மகாதீபாராதனை, அன்னதானம் நடந்தது. பூஜைகளை புத்தூர் குமரர் கோயில் அர்ச்சகர் ராம்குமார் குழுவினர் நடத்தினர்.