Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜஸ்தானில் நவராத்திரி! தன்னைத் தானே பூஜித்த சிவன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தவத்தின் எல்லை சிவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2017
05:02

ஜெபம், தியானம் என்னும் ஆன்மீக முயற்சிகள். இந்த உலகத்தில் வேண்டியதைப் பெற்று வெற்றிகரமாக வாழ்வதற்குரிய வழியாகும். தவம் என்பது. இந்த பூமியிலிருந்து விடுதலையாகிப் பிறவிப் பிணியை வெல்வதற்குரிய உபாயம் ஆகும். உணவையும் நீரையும் சுருக்கி விரதம் இருந்து நிலத்திலிருந்து நீரிலிருந்து விடுதலை பெறவேண்டும். வாசியோகப் பயிற்சிகள் வழியே மூச்சைக் கட்டிக் காற்றிலிருந்து விடுதலை பெறவேண்டும். நெருப்பு என்னும் பூதத்தை உடலை விட்டு நீங்காமல் காத்து அருட்பெருஞ்சோதி தரிசனத்தைக் காண வேண்டும். விண்ணிலிருந்து வெளியாகும் ஓம்... என்ற பாநாதத்தில் நம் செவி ஒடுங்க வேண்டும். இந்த உலகப் பொருள்களுடனும் உயர்களுடனும் கொண்டுள்ள உறவு என்ற பற்றை ஒழித்து துறவு என்ற பற்றற்ற நிலையை அடைய வேண்டும். ஏக இறைவனை ஏற்றுக் கொண்டு செய்யும் தவம், இறைவனை ஏற்றுக் கொள்ளாமல் செய்யும் தவம் என தவத்திலும் இரண்டு வழிகள் உண்டு.

மகாவீரர், புத்தர், கபிலதேவர் போன்றோர் காட்டிய சமண....புத்த.... சாங்கிய மார்க்கங்கள் இறைவனை ஏற்றுக்கொள்ளாமல் செய்யும் தவநெறிகள் ஆகும். ஏனைய மகான்கள் சித்தர்கள், தீர்க்கதரிசிகள், மார்க்கதரிசிகள் காட்டிய மார்க்கங்கள்யாவும் இறைவனை ஏற்றுக்கொண்டு செய்யும் தவநெறிகள் ஆகும். நம்மிடம் இறை மறுப்புக் கொள்கை இருந்தால் முதலில் சொன்ன நெறிகளைப் பின்பற்றலாம். இறை ஏற்புக்கொள்கை இருந்தால் இரண்டு நெறிகளில் எனத வேண்டுமானாலும் பின்பற்றலாம். சென்னை, திருமுடிவாக்கத்தில் கற்றுத் தரப்பெறும் புத்த பகவானின் உண்மையான விபாசனா தவப்பயிற்சி மிக உன்னதமான பயிற்சி. ஜெபத்தைக் கூட்டாகச் செய்யலாம். தியானத்தைத் தனியாகவும் செய்யலாம்; கூட்டாகவும் செய்யலாம். தவத்தைத் தனித்திருந்து செய்வதே உத்தமம். எல்லா வகையிலும் இணக்கமான, ஆன்மநேயத்துடன் தம்மை ஒப்புக்கொடுத்த மக்களுடன் செய்வதில் தவறில்லை. தவத்தின் உச்சத்தை அடைந்த ஓர் ஆன்மாவை இறைவன் பற்றி இழுக்கும்போது உடனிருக்கும் ஆன்மாக்களுக்கும் சேர்ந்து முக்தி வாய்க்கும்.

சுவற்றில் சாயாமல் முதுகுத் தண்டை நிமிர்த்தி, கழுத்து..... தலை நேராக இருக்குமாறு அமர்ந்து தவம் செய்யப் பழக வேண்டும். அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயம்வரை, நண்பகல் 12 மணி, இரவு 7 மணிக்கு மேல் நள்ளிரவு 12 மணி வரை தவத்திற்கு மிகப் பொருத்தமான நேரங்கள், அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷ நாட்கள் தவத்திற்கு உச்சமான நாட்கள். குறைந்த பட்சம் 25 நிமிடங்கள் எனத் தொடங்கி, அதிகபட்சமாக ஒரு மணி நேரம் வரை தவம் செய்து பழக வேண்டும். தவம் கைகூடிவிட்டால் காலம் கழன்றுகொள்ளும். அகாலநிலை வாய்க்கும். தகுதியுள்ள குருமாரிடம் தீட்சை பெற்றுத் தவமுயற்சிகளைத் தொடங்கி வெற்றி பெறுக! தவத்தின் எல்லையாகிய சிவத்தை உணருங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar