விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அங்காளபரமேஸ்வரி கோவிலில், மயானக் கொள்ளை விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 15ம் தேதி காலை 10:30 மணிக்கு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றுதல் நடந்தது. பிப்23, காலை 11:00 மணிக்கு அங்காளம்மன், பாவாடைராயன், குறவன், குறத்தி, காளி, காட்டேரி வேடம் அணிந்து வீதியுலா நடந்தது. பிற்பகல் 2:00 மணிக்கு கீழ்பெரும்பாக்கம் மயானத்தில், மயானக்கொள்ளை விழா நடந்தது.