பதிவு செய்த நாள்
25
பிப்
2017
12:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி சன்னதியில், வெளிநாட்டவர் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய, பல்வேறு பகுதிகளிலிருந்து வெளிநாட்டவர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பிப்24, திடீரென கோவில் நிர்வாகம் சார்பில், கிளி கோபுர நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், "வெளிநாட்டவர்கள் கிளி கோபுரத்தின் உட்புறம் செல்ல அனுமதி இல்லை என, எழுதப்பட்டுள்ளது. மேலும் ஜீன்ஸ், ஹீல்ஸ், லெகின்ஸ் அணிய தடை விதித்தும் மற்றும் கேமரா, மொபைல்போன், ஹெல்மெட் கொண்டு செல்ல தடை செய்யப்படுவதாக அறிவித்து, அதற்கான படக்குறியீடும் அதில், அச்சிடப்பட்டுள்ளது. சிவராத்திரி விழாவை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பக்தர்கள் வந்தனர். திடீரென அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதை கண்டு, அதிர்ச்சியடைந்து திரும்பிச் சென்றனர்.