பதிவு செய்த நாள்
25
பிப்
2017
12:02
ஓசூர்: ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள சிவன் கோவில்களில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஓசூர், மலை மீதுள்ள சந்திரசூடேஸ்வரர் கோவில், தேர்ப்பேட்டை பச்சைக்குளம் பத்ர காசி விஸ்வநாதர் ஆலயம், ராம்நகர் சொர்ணாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவில், கோகுல் நகர் சிவன் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் பிப்24, அதிகாலை முதல், சிவனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. புஷ்ப அலங்காரம், தீர்த்த பிரசாதம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பேவநத்தம் சிவாநஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு, தேன்கனிக்கோட்டை டிப்போவில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சூளகிரி அடுத்த எலசேப்பள்ளி கிராமத்தில் உள்ள, புட்டலிங்கேஸ்வர சுவாமி கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது.