Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செஸ் போட்டியில் வெற்றி தரும் சிவன்! பாவம் போக்கும் சுபநாள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விதியை நினைப்பவன் ஏமாளி ..
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2017
04:02

*விதியை மட்டும் நம்பும் ஏமாளிகள், எதையும் வாழ்வில் சாதிக்க மாட்டான். முயற்சி உடையவன் அறிவால் வெல்லும் ஆற்றல் பெற்றிருப்பான்.
*மலரில் மணமும், விறகில் தீயும், பாலில் நெய்யும், கரும்பில் இனிமையும் இருப்பது போல, உலகிலுள்ள எல்லா உயிர்களிலும் கண்ணுக்கு தெரியாமல் கடவுள் வீற்றிருக்கிறார்.
*மனதை அடக்கியாளத் தெரிந்தவனுக்கே நாட்டையும் ஆட்சி செய்யத் தெரியும். நற்பண்பு கொண்டவனுக்கே மனதைக் கட்டுப்படுத்தும் சக்தி உண்டாகும்.
*மகிழ்ச்சியில் மட்டுமில்லாமல் துன்பம் நேரும் போதும் உடனிருப்பவனே நல்ல நண்பன். தகுதியான நல்ல நண்பர்களுடன் நட்பு கொள்வது மிக அவசியம்.
*ஒழுக்கம் இல்லாமல் இருப்பதை விட உயிரை விடுவது மேலானது.
*சோம்பல் இருக்குமிடத்தில் முன்னேற்றம் இருக்காது.
*தைரியம் உள்ளவனையே அதிர்ஷ்டம் தேடி வரும். ஆனால், அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பிக் கொண்டு, உழைக்காமல் இருந்தால் எதையும் சாதிக்க முடியாது.
*சரியான திட்டமிடுதலே பணியை எளிதாக்கும். உள்ளத்தில் உறுதியும், காலத்தின் அருமையும் அறிந்தவன் எந்த பணியையும் நிறைவேற்றும் வலிமை படைத்தவனாக இருப்பான்.
*தீய சொற்கள் நெருப்பை விட தீமையை உண்டாக்கும்.
*பின்விளைவைச் சிந்திக்காமல் செயல்படக்கூடாது. ரகசியமான விஷயங்களையும், கசப்பான உண்மைகளையும் அனைவரிடமும் சொல்லக் கூடாது.
*தனக்குப் பிறர் செய்த சிறிய உதவியையும் பெரிதாக மதிப்பவனே உயர்ந்த மனிதன். பகைவனாக இருந்தாலும் பிறரது வயிற்றுப் பிழைப்பைக் கெடுப்பது கூடாது.
*பிறர் துன்பத்தை தன் துன்பமாகக் கருதுபவனே நல்லமனிதன். துன்பம் வரும் போது வருந்திப் பயனில்லை. அதைப் போக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
*இரவு துõங்கச் செல்லும் முன் அன்றைய நாள் செய்த பணிகளைச் சிந்திக்க வேண்டும். குறைகளை திருத்திக் கொள்ளவும், நிறைகளை பின்பற்றவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
*குளத்தில் நீர் வற்றினால் பறவைகள் பறந்து விடும். அது போல மனிதன் சுயநலத்துடன் இருக்கக் கூடாது. துன்பம் நேரும் போது உடன்இருப்பவர்களைக் காப்பாற்ற முயலவேண்டும்.
*நீரை விட்டு பாலை மட்டும் உறிஞ்சும் அன்னப்பறவை போல மனிதன் நல்லதைப் பின்பற்றவும், தீமையைத் தவிர்க்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.      
ஈபெரிய மனிதர்களிடம் உள்ள சிறிய தவறுகளைப் பொருட்படுத்த வேண்டாம்.
*கடந்தகாலம் குறித்து கவலைப்படாதீர்கள். எதிர்காலம் குறித்த பயமும் வேண்டாம். நிகழ்காலத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுபவனே புத்திசாலி.
*புதிய முயற்சியில் ஈடுபடும் போது அதை பிறருக்கு சொல்ல வேண்டாம். செயல் முடியும் வரை அதை வெளிப்படுத்தாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.
*உணவு, பணம், குடும்பவாழ்க்கை மூன்றிலும் இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்ளுங்கள். படிப்பு, வழிபாடு, தானம் மூன்றிலும் திருப்தி அடையாமல் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.  (மகான் சாணக்கியர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar