மன ஒருமைப்பாடே வெற்றியின் ரகசியம். இந்த உண்மையை அறிந்தவர்களே உண்மையான அறிவாளிகள். கவனம் சிதறும் போது வழக்கமாகச் செய்யும் எளிய, சிறிய பணிகளில் கூட தவறு உண்டாவதைக் காணலாம். விடாமுயற்சி, ஆர்வத்துடன் ஈடுபடும் பணிகள் ஒழுங்காக அமைவதோடு விரைவாகவும் முடியும். காரணம் மன ஒருமைப்பாடே. மனம் அலை பாய்வது இயல்பு தான். முயற்சியின்றி, வெறும் புத்தக அறிவால் மட்டும் இதனைச் சரிப்படுத்த முடியாது.மனதைக் கட்டுப்படுத்துவது என்பது காற்றுக்கு வேலியும், கடலுக்கு மூடியும் போடுவது போன்றது. என்றாலும் விடாமுயற்சியால் இதை சாதிக்க முடியும்.நேர்மையும், வீரமும் மிக்க வீரன் அர்ஜுனனே மனக்குழப்பத்திற்கு ஆளாகும்போது, சாதாரண மனிதர்களின் நிலை மோசமானதாகவே இருக்கிறது. நாகரிகம் என்ற பெயரில் மனம் தறி கெட்ட நிலையில் ஓடிக் கொண்டிருக்கிறது. புலன் இன்பம் தேடி இன்றைய மனிதன் அலைகிறான்.
மனதை நெறிப்படுத்த விரும்புவோர் முதலில் செய்ய வேண்டியது இது தான். மனச்சிதறலுக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகளில் இருந்து விலக வேண்டும். எண்ணும் எண்ணம், காணும் காட்சி, செய்யும் செயல் எல்லாம் மனத் துõய்மைக்கு வழிவகுப்பதாக அமைய வேண்டும்.மனிதர்களே தென்படாத காட்டில் வாழ்ந்தால் தான் நிம்மதிக்கான வழி கிடைக்கும் என யாரும் தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம். எப்போதும் அறிவுக்கு வேலை கொடுங்கள். சிந்தித்து செயலாற்றுங்கள். புத்தியின் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே மனதை வசப்படுத்த முடியும்.விருப்பம் போல வாழ்க்கை நடத்தினால் என்ன என்று கூட உங்களுக்குத் தோன்றும். மனவலிமை இல்லாவிட்டால் வாழ்வில் சாதாரணவிஷயத்திற்கு கூட போராட வேண்டியிருக்கும்.ஒருமுகப்படுத்திய மனம் ஒளி விளக்குக்கு நிகரானது. மனத்தெளிவுடன் செயலாற்றுபவர்களால்சமுதாயமே நன்மை பெறுகிறது.மனம் தெளிவுடன் இருக்க உணவு, உடை மட்டுமல்ல. இருக்கும் வீடு, அங்குள்ள சாமான்கள் கூட ஒழுங்குடன் இருப்பது அவசியம்.உண்பது, உறங்குவது இவற்றில் சரியான நேரத்தைக் கடை பிடிப்பதும், மூன்று வேளையும் அளவுடன்உண்பதும் மனக்கட்டுப்பாட்டுக்குவழிவகுக்கும்.
அரட்டை, வீண் பேச்சால் மனதின் ஆற்றல் வீணாக்கப்படுகிறது. தேவைக்கு கூட அளவாகப் பேசுவதால் மனதில் அமைதியும்,தெளிவும்நிலைத்திருக்கும்.எந்த செயலில் ஈடுபட்டாலும் என்னால்சாதிக்க முடியும்என்று சுயநம்பிக்கையோடு சொல்லிப் பழகுங்கள். இதன் மூலம் மனம் துõண்டப்பட்டு பலம் மிக்கதாக மாறும். அரிய பெரிய செயல்கள் எல்லாம் விடாமுயற்சி, உழைப்பால் தான் சாதிக்கப்பட்டிருக்கின்றன. இவை இரண்டும் வெற்றிக்கான தாரக மந்திரங்கள். லட்சியத்தில் மனதை நிறுத்தி விட்டால், மனிதனுக்கு இயல்பாக உண்டாகும் துõக்கம், பசி, களைப்பு போன்றவை கூட பெரிதாகப் படாது.