மேலுார், மேலுார் அருகே சேக்கிபட்டியில் உள்ள முத்தாலம்மன் கோயில் மாசி மாத விழாவில் சேக்கிபட்டி, உடப்பம்பட்டி, அருக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் சேக்கிபட்டி காடு என்னுமிடத்தில் இருந்து ஒரு கி.மீ., துாரமுள்ள முத்தாலம்மன் கோயிலுக்கு அம்மன் சிலையை கொண்டு வந்தனர். கோயிலில் திருவாச்சி மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.