பதிவு செய்த நாள்
04
மார்
2017
12:03
புதுச்சேரி: மாசிமக தீர்த்தவாரிக்கு வரும், தீவனுார் பொய்யாமொழி விநாயகர், செஞ்சி ரங்கநாதர், மயிலம் சுப்ரமணியர் ஆகிய சுவாமிகளுக்கு, வரும் ௧௧ம் தேதி வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாசிமக வரவேற்புக் குழு சார்பில், சாரம் அவ்வைத் திடலில், ௧௧ம் தேதி இரவு 8:00 மணிக்கு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 2௮ம் ஆண்டாக, இந்த வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அபிஷேகம்: தீர்த்தவாரியில் பங்கேற்று புறப்படும், தீவ னுார் பொய்யாமொழி விநாயகருக்கு, 15ம் தேதியன்று, காலை 8.00௦௦ மணி முதல், சாரம் நடுத்தெருவில் உள்ள, சித்தி புத்தி விநாயகர் ஆலயத் தில், யாகசாலை பூஜையுடன் சிறப்பு ஆராதனை, 108 கலச அபிஷேகம், இரவு வீதியுலா நடக்கிறது. 16ம் தேதி காலை விநாயகருக்கு வழியனுப்பு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை, சாரம் மாசிமக வரவேற்பு குழு தலைவர் ஆதிகேசவன், செயலாளர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.